இலங்கையின் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட சில பகுதிகளில் நேற்று இரவு
திடீர் மின்தடை ஏற்பட்டது.
நேற்று திங்கட்கிழமை இரவு 7.00 மணி முதல் இவ்வாறு திடீர் மின்தடை ஏற்பட்டு இரவு 9.30க்குப் பின் வழமைக்குத் திரும்பியுள்ளது.
வடக்கு மாகாணம் முழுவதும் மின் தடை ஏற்பட்டுள்ளது போல் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மின் தடை ஏற்பட்டது.
வவுனியா, மன்னார், முல்லைத்தீவு,கிளிநொச்சி, யாழ்ப்பாணம், திருகோண
மலை, மட்டக்களப்பு உள்ளிட்ட நாட்டின் மேலும் சில பகுதிகளிலும் முன்ன
றிவிப்பின்றி மின் தடை ஏற்பட்டது.
அனுராதபுரத்தில் அமைந்துள்ள பிரதான மின்மாற்றியில் ஏற்பட்ட கோளாறே இத் திடீர் மின்தடைக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது