வடக்கில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி

வடக்கு மாகாணத்தில் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் இருவரும், முல்லைத்தீவில் ஒருவரும் இவ்வாறு தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர் என்று   வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 419 பேரின் மாதிரிகள் நேற்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் சேர்க்கப்பட்ட சுண்டுக்குளியைச் சேர்ந்த 37 வயது ஆணொருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதேவேளை, சாவகச்சேரி வைத்தியசாலையில் கொரோனா அறிகுறிகளுடன் சேர்க்கப்பட்ட பெண்ணொருவருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இவர் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட தொற்றாளருடன் தொடர்புடையவர். முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் பெண்ணொவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர் ஆடைத் தொழிற்சாலை தொற்றாளருடன் தொடர் புடையவர் என மருத்துவர் கேதீஸ்வரன் குறிப்பிட்டார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *