வடக்கில் நேற்று 25 சிறுவர்கள் உட்பட 143 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். இதில், 18 சிறுவர்கள் உட்பட 108 பேர் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று 502 பேரின் பி.சி.ஆர். மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
இதில், சாவகச்சேரியில் 5 பேரும், சங்கானையில் 25 பேரும், உடுவிலில் 12 பேரும், யாழ். மாநகரில் 13 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். மானிப்பாய் பிரதேச வைத்தியசாலையில் 3 பேரும், அளவெட்டி, பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலைகளில் தலா ஒருவரும், பருத்தித்துறை, தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைகளில் தலா ஒருவரும் தொற்றாளர்களாக இனங்காணப்
பட்டனர்.இதேபோல, வவுனியா மாவட்டத்தில் 5 சிறுவர்கள் உட்பட 27 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 2 சிறுவர்கள் 7 பேரும் தொற்றாளர்களாக அடை
யாளம் காணப்பட்டனர்.இதேபோன்று, யாழ். பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் 233 பேரின் பி. சி. ஆர். மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் 8 சிறுவர்கள் உட்பட
44 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர்.
யாழ்ப்பாண மாநகரில் 4 சிறுவர்கள் உட்பட 9 பேரும், தெல்லிப்பழையில் இரு சிறுவர்கள் உட்பட 28 பேரும், நல்லூரில் ஒரு சிறுவன் உட்பட 6 பேரும்,
சாவகச்சேரியில் 15 வயது சிறுமி ஒருவருமாக 44 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர்.
—————-
Reported by : Sisil.L