மார்ச் 10 ஆம் திகதி கடத்தப்பட்டதாக ஓர் ஊடகவியலாளர் வழங்கிய தவறான முறைப்பாடு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன மற்றும் அவரது மகன் சத்துர சேனாரட்ன ஆகியோர் இன்று கொழும்பு குற்றப் பிரிவுக்கு வருகை தந்தனர்.முன்னதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண, சியரட்ட இணையத்தள ஊடகவியலாளர் சுஜீவ கமகே, தான் கடத்தப்பட்டதாகவும் மாளிகாவத்தை வீதி திருப்பத்தில் ஆதாரங்கள் மற்றும் அரசியல் தொடர்புகள் குறித்த தகவல்களுக்காக சித்திரவதை செய்யப்பட்டதாக தவறான முறைப்பாடு செய்ததாகவும் கூறியிருந்தார். எவ்வாறாயினும் இச்சம்பவம் குறித்து கொழும்பு குற்றப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த ஊடகவியலாளர் போலி முறைப்பாடு செய்திருப்பது தெரியவந்தது என அஜித் ரோஹண தெரிவித்தார்.
குறித்த ஊடகவியலாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட முன் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன மற்றும் சத்துர சேனாரட்ன ஆகியோரை சந்தித்துள்ளதால் அவர்களது அறிக்கைகளை கொழும்பு குற்றப்பிரிவு பதிவு
செய்யும் என பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் கூறினார்.
Reported by : Sisil.L