யாழ்.மரக்கறிச் சந்தை மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது

யாழ். நகரிலுள்ள மரக்கறிச் சந்தைத் தொகுதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது என

வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்

தார். மரக்கறிகள், பழங்கள், உள்ளூர் உற்பத்திகள் மற்றும் வெற்றிலைக் கடை

கள் அடங்கிய சந்தைப் பகுதி மாத்திரம் இவ்வாறு மூடப்பட்டது என அவர்

குறிப்பிட்டார்.யாழ்.நகரிலுள்ள மரக்கறி சந்தைத் தொகுதியில் எழுமாறாக 60 பேரிடம்

நேற்று மாதிரிகள் பெறப்பட்டன. இவர்களில் 9 வியாபாரிகளுக்கு தொற்று உறு

திப்படுத்தப்பட்டது. இதில் 6 உள்ளூர் உற்பத்திப் பொருட்கள் (பனம் பொருள்

கள்)விற்பனையில் ஈடுபடும் வியாபாரிகளும்,  மரக்கறி வியாபாரிகள் மூவரும் அடங்குகின்றனர்.

இதனால் சந்தைத் தொகுதியின் அனைத்து வியாபாரிகளும் சுயதனிமைப்

படுத்தப்பட்டனர் என்றும் மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்தார்.

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *