யாழ் வலி கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட புத்தூர் நிலாவரை பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தினர் இன்று மீண்டும் அகழ்வுப் பணிகளை தொடங்கியிருப்பதால் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. நிலாவரை கிணற்றை அண்மித்த பகுதியில் கடந்த மாதம் தொல்லியல் திணைக்களத்தினர் அகழ்வுப் பணிகளை மேற்கொண்டிருந்த நிலையில் பொதுமக்கள் எதிர்ப்பினால் பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில் இன்று மீண்டும் குறித்த பகுதிக்கு வந்த தொல்லியல் திணைக்களத்தினர் அகழ்வுப்பணிகளைஆரம்பித்த நிலையில் வலிகிழக்கு பிரதேச சபை தவிசாளர் பொதுமக்கள் இணைந்து எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இதையடுத்து தொல்லியல் திணைக்களத்தினர் தவிசாளருக்கு எதிராக அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ள நிலையில் தவிசாளரை விசாரணைக்கு வருமாறு பொலிஸார் அழைத்துள்ளனர்.
Reported by : Sisil.L