யாழ்ப்பாணத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா : மருத்துவர் கேதீஸ்வரன்

யாழ்ப்பாணத்தில் 12 பேருக்கும், வவுனியாவில் ஒருவருக்கும் என வடக்கு மாகாணத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்றுப் புதன் கிழமை உறுதி செய்யப்பட்டது என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடங்களில் 660
பேரின் மாதிரிகள் நேற்றுப் பரிசோதனைக்குஉட்படுத்தப்பட்டன. இதன்போதே, 13 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.


இதில், சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் மூவருக்கும்,  யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இருவருக்கும், கரவெட்டி, வேலணை மற்றும் கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் தலா ஒருவருக்கும் என சுயதனிமைப்படுத்தலில் இருந்த 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.


யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நோயாளர் விடுதியில் சிகிச்சை பெற்ற ஒருவருக்கும், வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற வந்த ஒருவருக்கும் என இரண்டு பேருக்கு கொரோனா
தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.


யாழ்ப்பாணம் சிறைச்சாலைக் கைதிகள் இருவருக்கு தொற்று கண்டறியப்பட்டது.
வவுனியா செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்ற ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது என்றும் மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்தார்

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *