யாழில் 22 பேருக்கு நேற்று கொரோனா தொற்று: மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்

யாழ்ப்பாணத்தில் மேலும் 22 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று திங்கட்கிழமை உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 8 பேர் இ.போ.ச. காரைநகர் சாலையில் பணியாற்றும் சாரதிகள், நடத்துநர்கள், காப்பாளர்கள் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 387 பேரின்

மாதிரிகள் நேற்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதேவேளை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று 382 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இவர்களில் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சிற்றூழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இவர் ஏற்கனவே சுயதனிமைப்படுத்தப்பட்டவர்.

யாழ்ப்பாணம் மாநகர பொதுச் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் கார்கில்ஸ் கட்டிடத் தொகுதியில் பாதுகாப்பு உத்தியோகத்தராகக் கடமையாற்றுபவர்.

இதேவேளை, இ.போ.ச. காரைநகர் சாலையைச் சேர்ந்த 90 பேரிடம் பி.சி.ஆர். பரிசோதனை நேற்று முன்னெடுக்கப்பட்டது. இவர்களில் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவர்களில் சாரதிகள் மூவர்,நடத்துநர்கள் மூவர் மற்றும் காப்பாளர்கள் இருவர் அடங்குகின்றனர்.

ஊர்காவற்றுறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 9 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இவர்கள் ஊர்காவற்றுறை மெலிஞ்சிமுனை தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள்.

இதேவேளை, உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இருவருக்குகொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இவர்கள் இருவரும் ஏற்கனவே

தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் என்று மருத்துவர் கேதீஸ்வரன்தெரிவித்தார்.

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *