யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் 11 பேர் உட்பட வடக்கில் மேலும் 21 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடங்களில் 788 பேரின் மாதிரிகள் நேற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் 21 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 15 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அவர்களில் 11 பேர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள்.பொலிஸ் நிலையத்தில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட
உத்தியோகத்தர்களுடன் நெருங்கிய தொடர்புடைய அனைவரும்
சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்ற இருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறு
திப்படுத்தப்பட்டுள்ளது.
கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவிலும் நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவிலும் தலா ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் சுயதனிமைப்படுத்தலில் கண்காணிக்கப்பட்டவர்கள்.
மன்னார் மாவட்டத்தில் 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மல்லாவி வைத்தியசாலைக்குச் சென்ற இராணுவ உத்தியோகத்தர் ஒருவருக்கு
கொரோனாத் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது.
Reported by : Sisil.L