யாழில் உறவினர் முறுகலை விசாரிக்கச் சென்ற பொலிஸ் சார்ஜன்ட் மீது தாக்குதல்

உறவினர்களுக்கு இடையே இடம்பெற்ற முறுகல் நிலையை விசாரணைசெய்யச் சென்ற யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய சார்ஜன்ட் மீது சகோதரர்கள் தாக்

குதல் நடத்தினர்.இந்தச் சம்பவம் நேற்றுக் காலை யாழ்ப்பாணம் திருநகர்ப் பகுதியில் இடம்பெற்

றது.இதனையடுத்து திருநகருக்கு பெருமளவு பொலிஸார் அழைக்கப்பட்டு விசா

ரணைகள் முன்னெடுக்கப்பட்டன.தாக்குதல் நடத்திய சகோதரர்கள் இருவரும் நாவற்குழி பகுதிக்குத் தப்பிச்

சென்று தலைமறைவாகியுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.இந்தச் சகோதர்களில் ஒருவர் மீது, யாழ். மாநகர சபை ஊழியர் ஒருவருக்கு

கஞ்சா போதைப்பொருள் விற்பனை செய்தமை உள்ளிட்ட 3 வழக்குகள்நீதிமன்றில் நடைபெறுகின்றன என்று பொலிஸார் கூறினர்.

திருநகரில் நேற்று முன்தினம் குடும்ப உறவினர்களுக்கு இடையே முரண்பாடு

ஏற்பட்டது. இதனால் துவிச்சக்கர வண்டி ஒன்றும் சேதமாக்கப்பட்டது.இந்தச் சம்பவம் தொடர்பில் 119 அவசர பொலிஸ் முறைப்பாட்டுப் பிரிவுக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் விசாரணையை முன்னெடுக்கச்சென்ற பொலிஸ் சார்ஜன்ட் மீதே தாக்குதல் நடத்தப்பட்டது.

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *