முடக்க நிலையைக் கையாள 20ஆயிரம் பொலிஸார் களத்தில்

நேற்றிரவு முதல் நடைமுறைப்படுத்தப்படும் போக்குவரத்து முடக்கத்தை கண்காணிப்பதற்காக 20,000 பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து கட்டுப்பாடுகள் உரிய முறையில் பின்பற்றப்படுவதை உறுதி செய்யும் நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுபடுவார்கள் எனவும் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து விதிமுறைகளை மீறியமைக்காக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டால் அவரது வாகனம் உடனடியாக பறிமுதல் செய்யப்படும் எனவும் தெரிவித்த அவர், நிறுவனங்கள் திறக்கப்பட்டிருந்தால் அவை மூடப்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதன் மூலம்  போக்குவரத்து முடக்கம் மீறப்பட்டால் அதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
——————-
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *