மகாவலி அதிகார சபையின் நில சுவீகரிப்பு நிறுத்தப்படும்: இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ உறுதி

பாராளுமன்ற உறுப்பினர்களிடம் நேற்று உறுதியளித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனின் ஏற்பாட்டில் கடந்த மாதம் இடம்பெற்ற சந்திப்பின் அடிப்படையில் நேற்று கல்முனை பிரதேச செயலக விவகாரம் தொடர்பான விசேட சந்திப்பு நடைபெற்றது. இதன்போதே மேற்படி விடயமும் பேசப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில் அமைச்சர்கள், செயலாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கு நேரில் சென்று பார்வையிட்டு கருத்தறிந்து இறுதி முடிவு எட்டப்படும் என்று தங்களால் ஏற்கனவே உறுதியளிக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த உத்தரவாதம் மீறப்பட்டு மகாவலி அதிகார சபை செயற்பட முனைகின்றது என தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

இதைச் செவிமடுத்த இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ, குறித்த பகுதிக்கு எம்மால் நேரில் பயணித்து அது தொடர்பான இறுதி முடிவு எட்டப்படும் வரை மகாவலி அதிகார சபையின் செயற்பாட்டை நிறுத்துமாறு செயலாளர் ஊடாகக் கடிதம் அனுப்பப்படும் என்று உத்தரவாதம் வழங்கினார்.

இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி என்பவற்றின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *