யாழ்ப்பாணத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று
வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்,மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடம் என்பனவற்றில் 636 பேரின் மாதிரிகள் நேற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்போதே, 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள்
தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.
இதேபோல், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட ஒருவர், கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் நால்வர் நேற்று தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். இதேவேளை, நல்லூர் சுகாதார மருத் துவ அதிகாரி பிரிவில் மூவருககு; தொறறு; உறுதிப்படுத்தப்பட்டது. இவர்கள் திருநெல்வேலி பாரதிபுரம் தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள்.
அத்துடன் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் ஒருவருக்கு தொற்று உறுதிப்
படுத்தப்பட்டது என்றும் கேதீஸ்வரன் தெரிவித்தார்.
Reported by : Sisil.L