பேலியகொடை மீன் சந்தையின் கழிவகற்றல் கட்டமைப்பை சீர்செய்து சுகாதார நிலையை மேம்படுத்துவது தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் கவனம்
செலுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை மத்திய மொத்த மீன் விற்பனை நிலையத்துக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர், மீன் சந்தை வளாகத்தைப் பார்வையிட்டார். இதன்போது, வடிகான் கட்டமைப்புகள் செம்மையாக பராமரிக்கப்படாமல் இருப்பதை அவதானித்த அமைச்சர், அதற்கான கராணத்தை வினவியதுடன் அதனை உடனடியாக திருத்துவதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் பணிப்புரை வழங்கினார்.மேலும், மீன்களை வெட்டுவதற்கான பிரிவொன்று ஏற்படுத்தப்படுவது உட்பட பல்வேறு கோரிக்கைகள் இதன் போது அதிகாரிகளால் அமைச்சரிடம் முன்வைக்கப்பட்டன.
அதிகாரிகளின் கருத்துகளை செவி மடுத்த அமைச்சர் டக்ளஸ், குறித்த விடயங்கள் தொடர்பில், உரிய தரப்பினருடன் கலந்துரையாடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
Reported by : Sisil.L