இளவரசரி ஹரி தம்பதியினருக்கு நான்காம் திகதி பெண் குழந்தை பிறந்துள்ள நிலையில் தங்களின் குழந்தையை அவர்கள் வீடியோ மூலம் பிரிட்டிஷ் மகாராணிக்கு காண்பித்துள்ளனர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நான்காம் திகதி அமெரிக்காவில் பிறந்த லில்லிபெட் டயானா மவுட்பட்டன் வின்ட்சர் மிக முக்கியமான நபரை சந்திக்க வேண்டியிருந்தது – அவர் யாரின் பெயரை சுவீகரித்துள்ளாரோ அவரை சந்திக்க வேண்டியிருந்தது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவில் பிறந்த பிரிட்டிஷ் அரச வம்சத்தின் முதலாவது நபர் என்ற வரலாற்றுப் பெருமைக்குரியவராகியுள்ள லில்லிபெட் டயானா மவுட்பட்டன் வின்ட்சர் வீடியோ மூலம் பிரிட்டிஷ் மகாராணியை சந்தித்தார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹரியும் மேகனும் தங்கள் குடும்பத்தின் புதிய வரவை மகாராணிக்கு காண்பிப்பது குறித்து பெரும் ஆர்வத்துடனிருந்தனர் எனவும் கலிபோர்னி யாவின் மருத்துவமனையிலிருந்து வந்தவுடன் அவர்கள் வீடியோ மூலம் குழந்தையைக் காண்பித்தனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹரி தம்பதியினர் குழந்தை பிறப்பதற்கு முன்னரே குழந்தைக்கு தாங்கள் தெரிவித்துள்ள பெயர் குறித்து பிரிட்டிஷ் மகாராணியிடம் தெரிவித்துள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
—————
Reported by : Sisil.L