பல வகை கொரோனாவுக்கும் தடுப்பூசிகள் பலன் தரும் – ஆய்வு முடிவு

பல வகை கொரோனா வைரஸ் தொற்றுகள் காணப்பட்டாலும், அனைத்துக்கும் தடுப்பூசிகள் பலன் தரும் என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.சீனாவின் உகான் நகரில் முதன் முதலாக கொரோனா வைரஸ் உருவானது. ஆனால் இது தொடர்ந்து உருமாறி புதிய வகை கொரோனாக்களாக பரவுகின்றன அந்த வகையில் உருமாறிய கொரோனாக்கள் பல நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளன. இங்கிலாந்தில் பி117, தென் ஆபிரிக்காவில் பி1351, பிரேசிலில் பி1, இந்தியாவில் பி16172 கொரோனாக்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த உருமாறிய கொரோனாக்கள் அனைத்தும் அதிவேகமாகப் பரவும் திறனைக்கொண்டுள்ளன.இப்படி பல வகை கொரோனாக்கள் கண்டறியப்பட்டாலும் அவை அனைத்துக்கும் எதிராக தடுப்பூசிகள் பலனளிக்கும் எனத் தெரியவந்துள்ளது.

கத்தார் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு, பி117 வகை கொரோனாவுக்கு எதிராக பைசர், பயோ என்டெக் நிறுவனங்கள் உருவாக்கியுள்ள தடுப்பூசி 90 சதவீத செயல்திறனைக் கொண்டிருப்பதாகக் கூறுகிறது.

பைசர், பயோஎன்டெக் நிறுவனங்களின் தடுப்பூசியும், அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசியும் பி16172 வகை கொரோனாவுக்கு எதிராக முறையே 88 சதவீதம், 60 சதவீதம் செயல்திறனைக் கொண்டுள்ளன என இங்கிலாந்து சுகாதாரத் துறை ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.
இந்தப் பகுப்பாய்வுகள், தொற்றுநோய்க்கான ஆபத்துடன் தொடர்பு உடையவை ஆகும். இருப்பினும், ஒரு தடுப்பூசி மூலம் மாறுபடும் சாத்தியக்கூறுகள் வரும்போது, மிக முக்கியமாக எழுகிற கேள்வி- யாரோ ஒருவர் பாதிக்கப்படுகிறாரா என்பதல்ல, அந்தத் தொற்று கடுமையான நோய்த்தாக்குதல் அல்லது மரணத்துக்கு வழிநடத்துகிறதா என்பதுதான்.

தடுப்பூசியின் வேலை, கடுமையான நோய்த்தாக்குதலைத் தடுத்து நிறுத்துவதாகும். இதுவரை கொரோனாவுக்கு எதிராக பயன்பாட்டில் உள்ள முக்கிய தடுப்பூசிகள் அனைத்தும் சம்மந்தப்பட்ட கொரோனாவுக்கு எதிராக செயற்படுகிற வேலையைச் செய்கின்றன என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
————————

Reported by : Sisil.L



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *