பயணக் கட்டுப்பாடுகளை மக்கள் தொடர்ந்து மீறினால் கொரோனா நிலைமை மோசமடையக் கூடும் என பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.
வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக தற்போது பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் பொது மக்கள் இக்கட்டுப்பாடுகளுக்கு இணங்கவில்லை என்றால் வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சி பயனற்றது என அவர் கூறினார்.எனவே பொதுமக்கள் தொடர்ந்து முகக் கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியைப் பேண வேண்டும், அத்தியாவசிய சேவைகளுக்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியேற வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.
——————
Reported by : Sisil.L