நெற்செய்கைக்கு தற்போது 4 வகையான புழுக்கள் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளதாக பதலகொட நெல் ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவனம் தெரிவித்தது.
நாட்டின் பல பகுதிகளிலும் இந்த புழுக்களின் தாக்கம் பதிவாகியுள்ளதாக அதன் பணிப்பாளர் பேராசிரியர் ஜயந்த சேனாநாயக்க தெரிவித்தார்.
நெற்பயிர்கள் தொடர்பில் தொடர்ச்சியாக கவனம் செலுத்துவதன் மூலம் இந்த புழுக்களின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டார்.
2 வாரங்களுக்கு மேல் புழுக்களின் தாக்கம் இருக்குமாயின், அதன் பாதிப்பு அதிகரிக்கலாம் என அவர் எச்சரிக்கை விடுத்தார்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் விவசாய திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கிருமி நாசினிகளை மாத்திரம் பயன்படுத்துமாறு அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
விவசாய அதிகாரிகளுக்கு இந்த விடயம் தொடர்பில் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இது ஒரு கறுப்பு நிற புழு எனவும் இதனால் நெற்பயிர் முழுமையாக பாதிக்கப்படக்கூடும் எனவும் பதலகொட நெல் ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவனத்தின் பணிப்பாளர் பேராசிரியர் ஜயந்த சேனாநாயக்க தெரிவித்தார்.
Reported by :Maria.S