நாட்டிலிருந்து தொற்று நோயை இல்லாது ஒழிக்க மூன்று வார கால ´பிரித்´ வழிப்பாடுகளானது, ஜனாதிபதி, பிரதமர், சுகாதாரத் துறை ஊழியர்கள் , முப்படையினர், பொலிஸ் மற்றும் அனைத்து இலங்கையர்களை ஆசீர்வாதித்து இன்று (18) மாலை வரலாற்று சிறப்புமிக்க கொழும்பு 7 இல் அமைந்துள்ள சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் மகா சங்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் ஜனாதிபதி, முதல் பெண்மணி, ஜனாதிபதியின் பிரதான ஆலோசகர் திரு. லலித் வீரதுங்க மற்றும் அவரது பாரியார், பாதுகாப்பு செயலாளர் மற்றும் அவரது துணைவியார், பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படை மற்றும் விமானப்படைத் தளபதிகள், உதவி பொலிஸ் மா அதிபர் திரு இஷார நானயக்கார மற்றும் அவரது பாரியார், எல்.ஓ.எல்.சி நிறுவனத்தின் தலைவர் (நிகழ்வின் முக்கிய அனுசரனையாளர்) ஆகியோர் கலந்துகொண்டனர்.
இப் பிரித் நிகழ்வானது ஜனாதிபதியின் கருத்திற்கமைய இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவின் ஏற்பாட்டில், பாதுகாப்பு செயலாளர், விமானப் படை , கடற் படை மற்றும் பொலிஸ் , அரச அதிகாரிகளின் ஆகியோரின் சிறந்த ஒத்துழைப்பில், பௌத்தலோக மாவத்தையில் உள்ள ஸ்ரீ கல்யாணி யோகஷர்ம பௌத்த விகாரையின் விகாராதிபதி பஹல விடியல ஜனனந்தபிதான தேரரின் வழிகாட்டுதலின் கீழ் 2020 டிசம்பர் 9 ஆம் திகதி வரை மூன்று வாரங்கள் தொடர்ச்சியாக பகல் மற்றும் இரவு நேரங்களில் இடம்பெறவுள்ளது.
21 நாள் பிரித் ஓதலின் முடிவில், கொவிட் -19 நோய்தெற்றில் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும் நாட்டின் அனைத்து முப்படையினரின் படைப் பிரிவுகள் , பொலிஸ், ஆகியோருக்கு ஆசீர்வதிக்கப்பட்ட 100,000 ´பிரித்´ நீர் கொள்கலன்கள் விநியோகிக்கபடள்ளதுஇதேபோல், தெய்வீக ஆசீர்வாதங்களை எதிர்பார்க்கும் ஆசீர்வதிக்கப்பட்ட தண்ணீரை காற்றில் இருந்து தெளிக்க வேண்டும். மேலும், இந் நிகழ்ச்சியின் அடிப்படையில் 700 புத்தர் சிலைகளும் நாடு முழுவதும் உள்ள கோயில்களில் விநியோகிக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடதக்கவிடய மாகும்.
இப் பிரித் வழிப்பாட்டல் மகா சங்கத்தினர் ´பிரித் மண்டபத்திற்கு சென்றபின்,பாரம்பரியமான வெற்றிலை தட்டுகளை தேரர்களுக்கு வழங்கிய பின்னர், ஜனாதிபதியின் முன் பூர்வாங்க அனுஷ்டிப்பு மேற்கொள்ளப்பட்டன. மகா சங்க உறுப்பினர்கள் சார்பாக ஐந்து கட்டளைகளைக் கடைப்பிடிப்பதற்கும், கோஷமிடுவதற்கும் ´அனுஷாசன´ நிகழ்வு இடம்பெற்றது..