இலங்கையில் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் எதிர்வரும் 31ஆம் திகதி வரையில் தொடர்வதால், தூர இடங்களுக்கான பஸ், ரயில் போக்குவரத்துச் சேவைகள் தொடர்ந்தும் நிறுத்தப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 11ஆம் திகதி முதல் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, கடந்த 13ஆம் திகதி இரவு முதல் நாடு பூராகவும் விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடு இன்று அதி காலை முதல் தளர்த்தப்பட்டது. எனினும், மாகாணங்களுக்கு
இடையிலான பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் 31ஆம் திகதி வரை நீக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாகாணங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்து தொடர்ந்தும் நிறுத்தப்படும் என்று இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் அத்தியாவசியப்பணிகளுக்குச் செல்வோருக்காக மாத்திரம் பஸ் சேவைகள் சில இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தூர இடங்களுக்கான ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன எனவும், ஆனால், அலுவலகப் பணியாளர்களுக்கான ரயில் போக்குவரத்துகள் மாத்திரம் இந்தக் காலப்பகுதியில் இடம் பெறும் எனவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
—————-
Reported by : Sisil.L