யாழ்ப்பாணத்தில் மேலும் 24 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக
மருத்துவபீட ஆய்வு கூடம் இரண்டிலும் 760 பேரின் மாதிரிகள் நேற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்
டன.இதன்போது, 26 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இவர்களில் யாழ்ப் பாணத்தில் 24 பேரும் கிளிநொச்சி, முல்லைத்தீவில் தலா ஒருவரும் தொற்றாள ராக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப் பட்ட ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டது.யாழ்ப்பாணம் திருநெல்வேலி பொதுச்
சந்தை மற்றும் கடைத் தொகுதிகளைச் சேர்ந்த 22 பேருக்கு தொற்று உறுதிப் படுத்தப்பட்டது. இவர்கள் சுயதனிமைப்
படுத்தப்பட்டிருந்த நிலையில் 14 நாள் களின் பின் நேற்று முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையிலேயே தொற்று கண்டறி
யப்பட்டது.கிளிநொச்சி, முல்லைத்தீவில் தலா ஒரு
வர் தொற்றாளராக அடையாளம் காணப் பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் சுயதனி மைப்படுத்தப்பட்டவர்கள் என்றும் கேதீஸ் வரன் தெரிவித்தார்.
Reported by : Sisil.L