கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய 755 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 6 முச்சக்கர வண்டிகளில் பயணித்த ஏழு பேரும் அடங்குவதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இதேவேளை அக்கரைப்பற்றிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பயணிகள் பேருந்து நேற்றிரவு முதல் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளது. அதில் 48 பயணிகள் இருந்துள்ளதாகவும் குறித்த சந்தேக நபர்கள் இன்று அம்பாறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறினார்.
—————–
Reported by : Sisil.L