ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு கனடா அங்கீகாரம் வழங்கியுள்ளது.அமெரிக்காவின் பிரபல மருந்து நிறுவனமான ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனம் கொரோனாவுக்கு எதிராகத் தயாரித்துள்ள தடுப்பூசிக்கு குறிப்பிட்ட சில நாடுகள் அங்கீகாரம் அளித்துள்ளன. இந்நிலையில் கனடிய அரசாங்கமும் ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனத்தின் சிங்கிள் டோஸ் தடுப்பூசியை அவசர கால தடுப்பூசியாக அங்கீகரித்துள்ளது. இதற்கு முன்பு கனடாவில் பைசர்- பயோ என் டெக், மாடெர்னா, அஸ்ட்ரா ஜெனேகா ஆகிய 3 தடுப்பூசிகளுக்கு அங்கீகாரம்
வழங்கப்பட்டுள்ள நிலையில் ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனத்தின் தடுப்பூசி நான்காவது தடுப்பூசியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே கொரோனாவுக்கு எதிராக 4 நிறுவன தடுப்பூசிகளை அங்கீகரித்த முதல் நாடாக கனடா திகழ்கிறது. 10 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளை ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனத்திடமிருந்து வாங்குவதற்கு கனடா முன்பதிவு செய்துள்ளது. இவ்வாண்டின் செப்டம்பர் மாத இறுதிக்குள் 10 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளும் வந்து விடும் என்று
கனடா எதிபார்க்கிறது.
ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனத்தின் தடுப்பூசியை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.