ஜெனிவா பிரேரணைக்கு இந்தியா அதரவளிக்கும்;சுமந்திரன் நம்பிக்கை

இலங்கையில் நல்லிணக் கம், பொறுப்புக்கூறலை நிலைநாட்டும் வகையில், அடுத்த வாரம் கொண்டுவரப்படும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பிரேரணைக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இந்தியாவின் ‘தி ஹிந்து’ நாளிதழுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், வாக்களிப்பதா அல்லது விலகுவதா எனத் தீர்மானிப்பது, இந்தியாவின் விடயம். ஆனால், தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க ண்டும் என்பது நமது நிலைப் பாடு. 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலுக்குப் பின்னர், பாராளுமன்றத்தில், வடக்கு-கிழக்கு தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மிகப் பெரிய கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளது. 2009 ஆம் ஆண்டு முதல் இலங்கை தொடர்பான ஐ.நா. தீர்மானங்களை, குறிப்பாக 2009, 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் மூன்று முறை ஆதரித்துள்ளது. இந்தப் பிரேரணையைத் தோற்கடிக்க, இலங்கை அரசாங்கம் இந்தியாவின் ஆதரவை உயர் மட்டத்தில் கோரியுள்ளது

இம்முறை, இந்தியா பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றார்.

இதேவேளை, இலங்கைக்கு, இந்தியா தனது ஆதரவை வழங்குவதாக உறுதி அளித்துள்ளது என, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே கூறியுள்ளார். இருப்பினும், குறித்த கருத்து தொடர் பாக, புதுடில்லி உத்தியோகபூர்வமாக எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை.

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *