தற்போது நாட்டில் பரவி வரும் கொவிட்-19 வைரஸ் கர்ப்பிணித் தாய்மாருக்கு கடுமையான விளைவை ஏற்படுத்தும் என மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ நிபுணர் மருத்துவர் மயூரமான தேவோலகே கூறியுள்ளார்.
தற்போது பரவும் வைரஸ் கர்ப்பிணித் தாய்மாரின் நுரையீரல்களை அதிகம் பாதிப்பதாக மருத்துவர் சுட்டிக்காட்டினார்.
கர்ப்பிணித் தாய்மாருக்கு வைரஸ் தொற்றுவதற்கான ஆபத்து அதிகம் என்றும் அவர் கூறினார்.
மூன்று கர்ப்பிணித் தாய்மார்கள் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சகல நேரங்களிலும் கர்ப்பிணித் தாய்மார் கொவிட்-19 வைரஸிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முயல வேண்டும் என்பதுடன் தொற்றின் அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்ய வேண்டியது அவசியமாகும் எனவும் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ நிபுணர் மருத்துவர் மயூரமான தேவோலகே தெரிவித்தார்.
Reported by : Sisil.L