கொழும்பு மாவட்டத்தில் நேற்று 533 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்

இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணாப்பட்ட 1531 பேரில் 533 நோயாளிகள் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட்-19 தொற்றை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.


இதற்கமைய இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையானது 106,484 ஆகவும் அதிகரித்துள்ளது .
நேற்றைய தினம் கொழும்பு மாவட்டத்தில் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களில் அதில் 129 பேர் பிலியந்தலை, 61 பேர் கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்டவர்கள் , 31 பேர் முல்லேரியா, 27 பேர் வெல்லம்பிட்டிய மற்றும் 19 பேர் மொரட்டுவவைச் சேர்ந்தவர்களாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .


Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *