இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 1111 பேரில் 200 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இதற்கமைய இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையானது 103,487 ஆகவும் அதிகரித்துள்ளது.
இதேவேளை கம்பஹா மாவட்டத்தில் 198 பேர், குருநாகல் மாவட்டத்தில் 119 பேர், காலி மாவட்டத்தில் 86 பேர், கண்டி மாவட்டத்தில் 74 பேர் , களுத்துறை மாவட்டத்தில் 70 பேர், நுவரெலியா மாவட்டத்தில் 55 பேர் , பொலன்னறுவை மாவட்டத்தில் 41 , மாத்தறை மாவட்டத்தில் 38 பேர், மொனராகலை மாவட்டத்தில் 37 பேர் , மாத்தளை மாவட்டத்தில் 32 பேர், திருகோணமலை மாவட்டத்தில் 28 பேர், பதுளை மாவட்டத்தில் 20 பேர் , அம்பாறை மாவட்டத்தில் 17 பேர் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இரத்தினபுரி மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் தலா 15 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் கேகாலையில் 14 பேர் , யாழ்ப்பாணத்தில் 9 பேர், அனுராதபுரத்தில் 7 பேர் , வவுனியாவில் 3 பேர் , புத்தளம் மற்றும் மட்டக்களப்பில் தலா 8 பேர் , மன்னார் மற்றும் முல்லைத்தீவில் தலா ஒருவர் என்ற ரீதியில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 15 பேரும் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட் -19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
Reported by : Sisil.L