கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மக்களின் முழுமையான ஒத்துழைப்பு எதிர்பார்க்கிறோம்: அமைச்சர் ஹெகெலிய ரம்புக்வெல

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் மீண்டும் ஏற்பட்டுள்ள நிலையில் அதனைக் கட்டுப்படுத்த மக்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு என சட்ட விதிமுறைகள் இன்றி மக்களின் ஒத்துழைப்புடன் தற்போதுள்ள நிலைமையைக் கட்டுப்படுத்தவே எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற விஷேட ஊடகவியலாளர் சந்திப்பில்
அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,நாடு தற்போது அபாய நிலையிலுள்ளது. எனவே, அதற்கு முகங்கொடுப்பதற்குத் தயாராக இருக்க வேண்டும். அதற்கான சகல வேலைத்திட்டங்களும் அரசாங்கம், சுகாதார அமைச்சு ஏனைய சுகாதார தரப்புகளால் முன்னெடுக்
கப்பட்டுள்ளன.எவ்வாறிருப்பினும் எத்தகைய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் மக்கள் ஒத்துழைப்பு வழங்கினால் மாத்திரமே அதனை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த முடியும். ஜேர்மன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில்கூட தற்போது கட்டுப்படுத்த முடியாதளவுக்கு வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளது.எமது அயல் நாடான இந்தியாவிலும் இதே நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் காணப்பட்டதை விட தற்போது உருமாறிய வைரஸ் பரவலே இதற்கான காரணமாகும். இது எமக்கு ஏற்பட்டுள்ள சவாலாகும்.

எனவே, இந்தச் சவாலுக்கு முகங்கொடுப்பதற்கு ஒவ்வொரு பிரஜையும் தமது கடமையை சரியாக நிறைவேற்ற வேண்டும்.


எனவே இம்முறை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அல்லது போக்கு
வரத்து கட்டுப்பாடு என்பவற்றை விதித்து சட்டத்தின் மூலமாக அன்றி, முழுமையாக மக்களின் ஒத்துழைப்புடன் நிலைமையைக் கட்டுப்படுத்துவதே எமது எதிர்பார்ப்பாகும் என்றார்.
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *