இஸ்லாமிய சகோதரர்கள் செறிந்து வாழ்கின்ற இடங்களில் வெற்றிடமாக பல ஏக்கர் காணிகள் இருக்கும் போது, முஸ்லிம் அமைப்புகளுடன் இது பற்றி கலந்து ஆலோசிக்காமல் இரணைதீவை தேர்ந்தெடுத்தது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளவோ, நியாயப்படுத்தவோ முடியாத செயலாகும் என தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்தார்
ஆனந்தசங்கரி இது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இரணை தீவுப் பகுதியை நான் நன்கு அறிவேன்
தற்போது தான் இடம்பெயர்ந்த அந்த மக்கள் தங்களது மீன்பிடித் தொழிலை அங்கு ஆரம்பித்திருக்கிறார்கள். யுத்தத்தின் பாதிப்பிற்கு அதிகளவு முகம் கொடுத்து, தங்களது வாழ்வாதாரத்தை முற்றிலுமாக இழந்தவர்கள் இரணை தீவு மக்களே. இந்த நிலையில் அவர்களை மேலும் பீதிக்குள்ளாக்கும் நிலைமையே இந்த நடவடிக்கை .கொரோனாவால் இறப்பவர்களின் சடலங்களை இரணை தீவில் புதைக்க எடுத்த தீர்மானம் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளவோ, நியாயப்படுத்தவோ முடியாததொன்றாகும். அவசரமாக எடுத்த இந்த முடிவு நாட்டின் இனங்களுக்கான விரிசலை ஏற்படுத்துவதற்கு வழிவகுத்து விடும்
இரணைதீவு கடல் சூழ்ந்த பகுதி என்பதால், மழைக்காலங்களில் உடல்கள் மேலும் பாதிப்படைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஏதோ ஒரு காரணத்துக்காக அரசு இந்த முடிவை எடுத்திருந்தால், இந்தத் தீர்மானம் முற்றிலுமாக அதற்கு முரண்பாடாகவே தோன்றுகின்றது. மேலும் அம் மக்கள் நிலத்தடி நீரையே நம்பி வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.ஆகவே அரசு இவ்விடயத்தில் முஸ்லிம் அமைப்புகளுடன் கலந்து ஆலோசித்து இரணை தீவை தவிர்த்து பொருத்தமான வேறொரு இடத்தைத் தெரிவு செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன்