கொரோனாவால் நிதி நெருக்கடி: மதக் குருக்களுக்கு சம்பளம் வெட்டு – பாப்பரசர் உத்தரவு

கொரோனா வைரஸ் பெருந்தொற்றால்  உலக நாடுகள் அனைத்தும் பொருளாதார ரீதியில் பெரும் பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றன. இதற்கு வத்திகானும் விதிவிலக்கல்ல.வத்திக்கானில் கொரோனாவால்அருங்காட்சியகங்கள், புனித தலங்கள், சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் இந்த ஆண்டு 50 மில்லியன் பவுண்ட்  வருமான இழப்பு ஏற்படும் என கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த வருமான இழப்புகாரணமாக கர்தினால்களுக்கும், பிற மதக் குருக்களுக்கும் சம்பள வெட்டு உத்தரவை பாப்பரசர் பிரான்சிஸ் பிறப்பித்துள்ளார். இது ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது. கர்தினால்களைப் பொறுத்தமட்டில் இந்த சம்பள வெட்டு 10 சதவீத அளவில் இருக்கும். அவர்கள் தற்போது மாதம் 5,000 பவுண்ட் வரையில் மாதச்சம்பளம் பெறுகின்றனர் என தகவல்கள் கூறுகின்றன. மதக் குருக்களுக்கு 3 சதவீதம் முதல் 8 சதவீதம் வரையில் சம்பளக் குறைப்பு செய்யப்படுகிறது.அதே நேரத்தில் நிதி நெருக்கடி காரணமாக வேலை இழப்புகள் செய்யப்பட மாட்டாது என பாப்பரசர் பிரான்சிஸ் ஏற்கனவே அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *