நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் இருவர் உயிரிழந்தனர். இதன் மூலம், கொரோனா தொற்றால் உயிரிழந் தோரின் எண்ணிக்கை 588 ஆக அதிகரித்துள்ளது என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பிபில பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயது ஆணொருவரும் அம்பாறை பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயது ஆணொருவருமே
இவ்வாறு உயிரிழந்தனர்.
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 93 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 8.30 மணிவரை 95 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். இதற்கமைய மொத்த
தொற்றாளர் எண்ணிக்கை 93 ஆயிரத்து 690 ஆக உயர்வடைந்தது.
இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 90 ஆயிரத்து 708 பேர் குணமடைந்ததோடு, 2301 பேர் தொடர்ந்தும்
சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Reported by : Sisil.L