யாழ்ப்பாணம் – கல்வியங்காட்டில் உள்ள வீடொன்றினுள் நுழைந்து சொத்துகளுக்கு சேதமேற்படுத்திய ஆறு பேரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
கல்வியங்காடு – பூதவராயர் வீதியில் உள்ள அரச உத்தியோகத்தர் ஒருவரது வீட்டின் சொத்துகளுக்கு, இரண்டு மோட்டார் சைக்கிள்களில் ஆயுதங்களுடன் வருகை தந்த 6 பேர் சேதம் விளைவித்துள்ளனர்.
குறித்த குழுவில் மூவர் பெண்களின் ஆடைகளை அணிந்து வந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது மோட்டார் சைக்கிள், மாணவர்களின் புத்தகப்பை என்பன தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளதுடன், ஜன்னல் கண்ணாடிகளும் CCTV கெமராக்களும் சேதமாக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் இடம்பெற்றமைக்கான காரணம் தொடர்பில் இதுவரை கண்டறியப்படாத நிலையில், CCTV கெமராவில் பதிவான காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Reported by:S.Kumara