ஊழியருக்கு கொரோனா;நெல்லியடியில் வெதுப்பகத்துக்கு சீல்

நெல்லியடியில் இயங்கிவரும் பிரபல வெதுப்பகத்தில் பணியாற்றும் பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சுகாதாரப் பிரிவினரால் அந்த வெதுப்பகம் மூடப்பட்டுள்ளது.

நெல்லியடியில் இயங்கிவரும் பிரபல வெதுப்பகத்தில் பணியாற்றுபவர்களிடம் பெறப்பட்ட பி.சி.ஆர். மாதிரிகள்
நேற்று  பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்தே, குறித்த வெதுப்பகத்தை கரவெட்டி மருத்துவ அதிகாரி பிரிவு  மூடியது. 

இதேவேளை, கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் நேற்று 18 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் இருவருக்கு தொற்று உறுப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
—————
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *