கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட நிலையில் மேலும் 05 பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக் களம் அறிவித் துள்ளது.
அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 520 ஆக உயர்ந்துள்ளது.
01 . அக்கரைப்பற்று பகுதியைச் சேர்ந்த 72 வயதான பெண் ஒருவர், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் , கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப் பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பின்னர் தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா, சுவாசத் தொகுதி தொற்று மற்றும் இரத்தம் விஷமானமையால் ஏற்பட்ட அதிர்ச்சி காரணமாக 2021 மார்ச் மாதம் 11 ஆம் திகதி உயிரிழந் துள்ளார்.
- மொரட்டுவ பகுதியைச் சேர்ந்த 75 வயதான ஆண் ஒருவர் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் , கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்று மற்றும் சிறுநீரக நோய் காரணமாக 2021 மார்ச் மாதம் 11ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
03. வத்தளை பகுதியைச் சேர்ந்த 72 வயதான பெண் ஒருவர், வட கொழும்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா
தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொ ரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா, இரத்தம் விஷமானமையால் பல உறுப்புகள் செயலிழந்தமை காரணமாக 2021 மார்ச் மாதம் 11 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
- றாகம பகுதியைச் சேர்ந்த 65 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் , கொரோனா தொற் றாளர் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து ஹோமாகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற் றால் ஏற்பட்ட நிமோனியா மற்றும் இரத்தம் விஷமானமையால் ஏற்பட்ட அதிர்ச்சி காரணமாக 2021 மார்ச் மாதம் 10 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
05. பொல்கஸ் ஓவிட்ட பகுதியைச் சேர்ந்த 73 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையில் , கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப் பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொ ரோனா தொற்றால்
ஏற்பட்ட நிமோனியா, இதய நோய் மற்றும் சிறுநீரக நோய் காரணமாக 2021 மார்ச் மாதம் 12 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 525 ஆக உயர்ந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.