இலங்கையில் சூழல் மாசுபடுத்தப்படுவதற்கும் ஆறுகள் மாசுபடுத்தப்படுவதற்கும் நானே முழுமையான காரணம் என சமூக ஊடகங்கள் தெரிவிப்பதாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.கதிர்காமத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் மக்கள் மத்தியில் பிரபலமான விடயங்களை பதிவு செய்ய முயலாமல் சூழலை பாதுகாப்பதற்கு தங்களை நேர்மையாக அர்ப்பணிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
சூழலுக்கு அழிவு ஏற்படுத்துவது குறித்த விடயங்கள் சமூக ஊடகங்களில் பிரபலமான விடயங்களாக மாறியுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்கான திட்டமிட்ட முயற்சிகள் இடம்பெறுகின்றன என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
சமூக தளங்களை ஆராயும் போது இலங்கையில் சூழல் மாசுபடுத்தப்படுவதற்கும் ஆறுகள் மாசுபடுத்தப்படுவதற்கும் நானே முழுமையான
காரணம் என சித்திரிக்கப்படுவதைக் காண முடிகின்றது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நான் அவ்வாறான நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கவில்லை,நான் கடந்த காலங்களில் பல நடவடிக்கைகள் மூலம் பசுமையான தேசத்தை உருவாக்க முயன்றுள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்
Reported by : Sisil.L