கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய பின்னர் தனது பொருளாதார வளர்ச்சி 3.6 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.இலங்கையின் மத்திய வங்கி தனது வருடாந்த அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது.
சுதந்திரத்துக்குப் பின்னர் இலங்கைப் பொருளாதாரம் சந்தித்த மிக மோசமான வீழ்ச்சி இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
முன்னேற்றமடைந்துள்ள உள்நாட்டு உற்பத்தி மற்றும் சேவை துறைகள் காரணமாக 2021 இல் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 6.1 வீதமாக அதிகரிக்கும் என மத்திய வங்கி நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கு பெரும் வருமானத்தை பெற்றுத்தந்த சுற்றுலாத்துறை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது. அதேவேளை கட்டுமானத்துறை, உற்பத்தித்துறை ஆகியனவும் பாதிக்கப்பட்டுள்ளன என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய அரசாங்கத்தின் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 101 வீதமாக உயர்ந்துள்ளது எனத் தெரிவித்துள்ள மத்திய வங்கி இதன் மூலம் நாடு எதிர்கொண்டுள்ள கடன் நெருக்கடியை சுட்டிக் காட்டியுள்ளது.
Reported by : Sisil.L