இலங்கைக்கு தற்போது 11 நண்பர்கள் மாத்திரமே :முன்னாள் அமைச்சர் மங்கள

இலங்கைக்கு தற்போது 11 நண்பர்களே உள்ளனர் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

2015 இல் இலங்கை தனது சொந்த நல்லிணக்க மற்றும் பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்வைத்தது என மங்கள சமரவீர  தெரிவித்துள்ளார்.

இதன் போது சீனா, ரஷ்யா உட்பட முழு நாடுகளும் எமக்கு ஆதரவாக அணிதிரண்டன என அவர் தெரிவித்துள்ளார்.தற்போது  இலங்கைக்கு 11 நண்பர்கள் மாத்திரமே உள்ளனர் எனத் தெரிவித்துள்ள அவர், அவர்கள் தங்களின் ஏதேச்சதிகாரங்களில் இடம்பெறும் அநீதிகளை மறைப்பதற்காக அவர்கள் மனித உரிமை பேரவை தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *