அம்பிகை செல்வகுமாரின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள் மீது லண்டனில் பொலிஸார் தாக்குதல்

இலங்கை விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என்பது உட்பட தமிழர்களின் நீதி தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்து உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அம்பிகை செல்வகுமாருக்கு ஆதரவாக லண்டனில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்கு முயன்ற பொலிஸார் தடியடி பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளதுடன் சிலரைக் கைது செய்துள்ளனர்.

லண்டனின் வடமேற்கில் உள்ள கென்டனில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து அகற்றுவதற்கு பொலிஸார் முயன்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *