உலக வங்கியின் அறிக்கையின்படி, உலகில் அதிக உணவுப் பணவீக்கம் உள்ள நாடுகளில் இலங்கை ஐந்தாவது இடத்தில் உள்ளது.
ஏனைய நாடுகளான லெபனான், சிம்பாப்வே, வெனிசுலா மற்றும் துருக்கி ஆகியன முன்னிலையில் உள்ளன.
இதேவேளை, உலக நாடுகள் மத்தியில் இலங்கையின் பணவீக்க வீதம் படிப்படியாகக் குறைந்து வருவதாக அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹான்கே தெரிவித்துள்ளார்.
ஸ்டீவ் ஹான்கேயின் சமீபத்திய பணவீக்க சுட்டெண்ணில் இலங்கை நான்காவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில், இந்தச் சுட்டெண்ணில் இலங்கை இரண்டாவது இடத்தில் இருந்ததுடன் அது சிம்பாப்வேக்கு அடுத்தபடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
——-
Reported by :Maria.S