மக்களுக்கு நியாயமான விலையில் அரிசி வழங்குவ தற்குத் தேவையான அரிசியை இறக்குமதி செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்படி, இந்தியாவிலிருந்து 300,000 மெற்றிக் தொன் அரிசியை விரைவாக இறக்குமதி செய்வதற்கு வர்த்தக அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சம்பா அரிசிக்குப் பதிலாக இரு இலட்சம் மெற்றிக் தொன் நாட்டு அரிசியும் ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் GR 11 (Short Grain Rice) அரிசியும் இறக்குமதி செய்யப்படும்.
வெளிச்சந்தையில் போதுமான அளவு அரிசி இருப்பை பேணும் வகையில் அரிசியை இறக்குமதி செய்ய வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன முன்மொழிந்துள்ளார்.
———————–
Reported by : Sisil.L