விதிமுறைகளை மீறும் கிரிக்கெட் வீரர்களுக்கு எதிராக இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட்டிற்கு புத்துயிர் அளிப்பதற்காக நேரத்தையும் வாய்ப்பையும் இளைஞர்கள் மத்தியில் முதலீடு செய்ய முடியும் எனவும் போதிய நோக்கமின்மையையும் ஒழுக்கமின்மையும் சகித்துக்கொள்ளக் கூடாது எனவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்த விதிமுறைகளை மீறும் வீரர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் நாமல் ராஜபக்ச டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
——————–
Reported by : Sisil.L