வட்டவளையில் சரக்கு ரயில் தடம்புரண்டது

கண்டியிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த சரக்கு ரயில் வட்டவளை புகையிரத நிலையத்தில் இன்று(11) தடம் புரண்டது.


ரயில் தடம் புரண்டதன் காரணமாக கண்டிக்கான புகையிரத சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.


ரயிலில் 5800 கலன் எரிபொருள் அடங்கிய தாங்கிகள் காணப்படுகின்றன.


இன்று  காலை 7 மணியளவில் இந்த ரயில் தடம் புரண்டதாகவும், ரயில் தடம் புரண்டதால் ரயில் பாதைக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் வட்டவளை ரயில் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


தடம் புரண்ட சரக்கு ரயிலின் எண்ணெய் தாங்கிகள் மற்றும் பெட்டிகள் ஏற்றுக்கொள்ளப்படும் வரை பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்கும் கண்டி ரயில்கள் ஹட்டன் புகையிரத நிலையம் வரையிலும் கொழும்பிலிருந்து பதுளை வரை செல்லும் ரயில்கள் வட்டவளை புகையிரத நிலையத்துக்கு அருகிலும் இயங்கும் என ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
———–
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *