இலங்கை தாமதமின்றி மாகாண சபைகள் தேர்தலை நடத்த வேண்டும் என இந்தியா கேட்டுக்கொண்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளி விவகா ரச் செயலாளரை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட பின்னர் கருத்து தெரிவிக்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இதனைத் தெரிவித்துள்ளனர். இந்தியா அதிகமாக முதலீடு செய்துள்ள தமிழர்கள் கூடுதலாக வாழும் பகுதி களில் மூன்றாம் தரப்பின் பிரசன்னத்தை விரும்பவில்லை எனவும் வெளி விவகாரச் செயலாளர் ஷிரிங்லா தமிழ் தேசிய கூட்டமைப்பினரிடம் தெரிவித் துள்ளார்.
மாகாண சபைத் தேர்தல்களை உடனடியாக நடத்துவதுடன் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என இந்தியா இலங்கையிடம் தெரிவித்துள்ளது என இந்திய வெளிவிவகார செயலாளர் ஷிரிங்லாகுறிப்பிட்டுள்ளார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
———————–
Reported by : Sisil.L