யாழ்ப்பாணத்தில் 34 பேர் உட்பட வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 43 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடங்களில் நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளிலேயே இவர்கள் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். யாழ். பல்கலைக்கழகத்தில் 337 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி, 16 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். இதன்படி, சண்டிலிப்பாயில் 12 பேரும், யாழ்ப்பாணம் மாநகரில் 4 பேரும் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர்.
யாழ்.போதனா வைத்தியசாலையின் ஆய்வுகூடத்தில் பரிசோதிக்கப்பட்ட 590 பேரின் பி.சி.ஆர். முடிவுகளின்படி 27 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதன் அடிப்படையில், சங்கானையில் 14 பேரும், யாழ்.போதனா வைத்தியசாலையில் 3 பேரும், பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் ஒருவருமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 18 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர்.
மாந்தை மேற்கில் இருவர், நானாட்டானில் மூவர், மன்னார் பொது மருத்துவமனையில் இருவர் என மன்னார் மாவட்டத்தில் 7 பேர் தொற்றாளர் களாக உறுதிப்படுத்தப்பட்டனர். இதேபோன்று, கிளி நொச்சி மாவட்டத்தில் ஒருவரும், வவுனியா மாவட்டத்தில் ஒருவரும் தொற்றாளர்களாக உறுதிப்படுத்தப்பட்டனர்.
—————-
Reported by : Sisil.L