வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா நேற்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்றார். ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று முற்பகல் இந்தப் பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றது.
தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினராக இருந்த அவர் கடந்த வாரம் அந்தப் பதவியை இராஜினாமா செய்திருந்தார். மனிதாபிமான அமைப்புகளின் கூட்டமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளராகவும் ஜீவன் தியாகராஜா கடமையாற்றியுள்ளார். இதற்கு முன்னர் வட மாகாண ஆளுநராக திருமதி பீ.எஸ்.எம். சார்ள்ஸ் கடமையாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
—————-
Reported by : Sisil.L