மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக லக்ஷபான மற்றும் கனியன் நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
லக்ஷபான நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகளும், கனியன் நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகளும் திறக்கப்பட்டதாக அந்த நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்தனர்.
இரண்டு நீர்த்தேக்கங்களின் வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதால் களனி கங்கையின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருவதாக நுவரெலியா அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரஞ்சித் அழகக்கோன் தெரிவித்தார்.
இதேவேளை, ஹட்டன் மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் பெய்து வரும் அடை மழை காரணமாக, பாதுகாப்பு பக்க சுவர் இடிந்து வீழ்ந்துள்ள நிலையில், இரண்டு கடைகள் சேதமடைந்துள்ளன.
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் பல இடங்களில் மண் மேடுகளும் மரங்களும் சரிந்து வீழ்ந்துள்ளதால் அவ்வீதியின் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.
———–
Reported by :Maria.S