ரொரன்ரோவில் 10 பேர் கொலை – இளைஞருக்கு ஆயுள் தண்டனை

நான்கு ஆண்டுகளுக்கு முன்  ரொரன்ரோவில்   இலங்கைப் பெண் ஒருவர் உட்பட 10 பேர் உயிரிழக்கக்  காரணமான நபருக்கு 25 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


29 வயதான குற்றவாளி 10 பேரைக் கொலை செய்ததாகவும், 16 பேரைக் கொலை செய்ய முயன்றதாகவும் கடந்த ஆண்டு  குற்றம் சுமத்தப்பட்டிருந்தார். பாதிக்கப்பட்டவர்களின் அன்புக்குரியவர்கள் நிறைந்த நெரிசலான ரொறண்டோ நீதிமன்றத்தில் நீதிபதி அன்னே மல்லாய் தனது தீர்ப்பை வழங்கினார்.


கொலையாளி பரபரப்பான நடைபாதையில் வானை மோதச் செய்து எட்டுப் பெண்களையும் இரண்டு ஆண்களையும் கொலை செய்தார்.


இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த 65 வயதான அமரேஷ் டெஸ்ஃபாமரியம் என்ற பெண் 23 ஏப்ரல் 2018 அன்று தாக்குதலில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக பல ஆண்டுகளுக்குப் பிறகு உயிரிழந்தார்.  

 

 ரொரன்ரோ   வீதியில் சம்பவம் இடம்பெறுவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்பு குற்றம் சாட்டப்பட்ட நபர் ஒரு ஆயுதமாக பயன்படுத்துவதற்கு வானை வாடகைக்கு எடுத்தார்.


முடிந்தவரை பலரைக் கொல்லத் தான் முடிவு செய்ததாகவும், இதற்கு ஒன்லைன் குழுக்களின் தவறான இயக்கத்திலிருந்து உத்வேகம் பெற்றதாகவும் குற்றவாளி விசாரணையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.


உயிரிழந்தவர்களில் 80 வயதான டோரதி செவெல், 45 வயதான ரேணுகா அமரசிங்க மற்றும் தென் கொரியாவைச் சேர்ந்த 22 வயதான ஜி ஹுன் கிம் ஆகியோர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் தாக்குதலை எப்படி உணர்ந்தார் என்று புலனாய்வாளர்களிடம் கேட்டதற்கு, அதற்குப் பதிலளித்த குற்றவாளி, நான் எனது பணியை நிறைவேற்றியது போல் உணர்கிறேன் எனக் கூறியுள்ளார்.
————–
Reported by:Anthonippillai.R

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *