ராஜகுமாரி மரணம் – நீதிமன்றில் முக்கிய சாட்சியம்

வெலிக்கடை பொலிஸ் காவலில் வைத்து உயிரிழந்ததாகக் கூறப்படும் வீட்டுப் பணிப்பெண் ராஜகுமாரியின் மரணம் தொடர்பிலான விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதவான் இன்று (21) உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பான அறிக்கையை எதிர்வரும் 26ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனவல உத்தரவிட்டுள்ளாா்.

இந்த சம்பவம் தொடர்பான மரண விசாரணை கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் இன்று (21) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குற்றப் புலனாய்வுத் திணைக்கள உத்தியோகத்தர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மெரில் ரஞ்சன் லமாஹேவா உள்ளிட்ட அதிகாாிகளின் வழிகாட்டலில் சாட்சியமளித்த மகேந்திரன் சுரேஸ் என்ற நபர், வெலிக்கடை பொலிஸ் நிலையத்திற்குள் இராஜகுமாரி பொலிஸ் உத்தியோகத்தரால் தாக்கப்பட்டதைக் கண்டதாக தெரிவித்துள்ளாா்.

ஒரு நாள் புறக்கோட்டை பிரதான பஸ் நிலையத்திற்கு அருகில் இருந்த போது இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் வந்து கைவிலங்கிட்டு வாகனத்தில் ஏற்றி பொரளை – கோட்டா வீதியில் உள்ள ராஜகுமாரி வேலை செய்த வீட்டிற்கு அழைத்துச் சென்றதாக சாட்சியாளா் கூறியுள்ளாா்.

மேலும் ராஜகுமாரியை அழைத்து வந்த பொலிஸாா் ஒருபக்க கைவிலங்கை அகற்றி அவாின் கையில் இட்டதாகவும் சாட்சி கூறினார்.

இவ்வாறு ராஜகுமாரியை அழைத்துச் சென்றபோது அவர் திடகாத்திரமாக இருந்ததாகவும், நன்றாக நடந்து சென்றதாகவும் தொிவித்தாா்.

வாகனத்தில் இருந்து அழைத்துச் செல்லப்படும் போது வாகனத்தில் இருந்த பொலிஸ் அதிகாரி ராஜகுமாரியிடம், “மோதிரம், வாசனை திரவியப் போத்தல் மற்றும் காலணிகளைத் திருடினாய்” என்று கூறியதாகவும் சாட்சியாளா் குறிப்பிட்டுள்ளார்.தானும் ராஜகுமாரியும் வெலிக்கடை பொலிஸாருக்கு அழைத்து வரப்பட்டதாகவும், அங்கிருந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் தம்மையும், ராஜகுமாரியையும் தாக்கியதாகவும் அவர்களில் ஒருவர் மொட்டையுடையவர் எனவும் மற்றையவர் ஒல்லியான உயரமானவர் எனவும் சாட்சியாளர் தெரிவித்துள்ளாா்.

இதன்போது ஒல்லியான உயரமான அதிகாரி ஒருவர் உயிாிழந்த ராஜகுமாரியை றப்பர் குழாயால் தாக்கியதை தான் பார்த்ததாக அவா் குறிப்பிட்டுள்ளாா்.

பின்னா் “சுதர்மா மேடம்” வந்து தாக்க வேண்டாம் என்றும், பிரச்சினையை தீர்க்குமாறும் கேட்டுக் கொண்டதாக சாட்சியாளா் மேலும் கூறியுள்ளாா்.

அதன்பின்னா், வழக்கு அடுத்தகட்ட விசாரணைக்காக எதிா்வரும், 26ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

Reported by:S.Kumara

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *