ரஷ்ய ஜனாதிபதி புட்டின் போர் குற்றவாளியாக  அமெரிக்கா அறிவிப்பு

அமெரிக்க செனட் சபை ஒருமனதாக ரஷ்ய ஜனாதிபதி புட்டினை போர் குற்றவாளியாக அறிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.


கடந்த 24ஆம் திகதி உக்ரைன் மீது படையெடுத்த ரஷ்யா 20 நாட்களுக்கு மேலாக போர் தாக்குதலை நடத்தி வருகின்றது.


இந்தத் தாக்குதலில் இரு தரப்பிலும் பலமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதோடு உக்ரைனில் பல முக்கிய இடங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

 

 உலக நாடுகள் பல ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்ததோடு பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.


எனினும் அதனை எல்லாம் பொருட்படுத்தாத புட்டின் போரை நிறுத்தாது தொடர்ந்து வருகின்றார். இந்த நிலையில் அமெரிக்க செனட் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விடயத்தை அரங்கேற்றியுள்ளது.


அதன்படி அமெரிக்க செனட் செவ்வாயன்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை ஒரு போர் குற்றவாளி என்று கண்டிக்கும் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றியது.


உக்ரைனில் ரஷ்யாவின் தாக்குதலானது நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமையானது முக்கிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.
—————————
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *