ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் ஆரம்பித்த திடீர் பணிப்பகிஷ்கரிப்பு இன்றைய தினமும்(05) முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ரயில்வே பாதுகாப்பு அதிகாரியொருவர் உப ரயில் கட்டுப்பாட்டாளர் மீது தாக்குதல் நடத்தியமையினால் இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக சங்கத்தின் பிரதம செயலாளர் K.D.D.பிரசாத் தெரிவித்துள்ளார்.
பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக இன்றும்(05) ரயில் சேவைகளில் தாமதம் ஏற்படலாம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
வேலைநிறுத்தத்திற்கு காரணமான சம்பவம் தொடர்பில் உள்ளக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், நேற்று(04) மாலை முன்னெடுக்கப்படவிருந்த பல ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Reported by :S.Kumara